உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு

2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்', துளிகள் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், காங்கயம் தாலுகா ஒரத்துப்பாளையம் அணை, தங்கம்மன் கோவில் பகுதியில் மரம் நடும் விழா துவங்கியது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் குணசேகரன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஒரத்துப்பாளையம் அணைக்கட்டுப்பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்; ஊத்துக்குளி ஆர்.எஸ்., முதல் படியூர் வரை ரோட்டின் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.உடுமலை தாலுகா பெரியவாளவாடி ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில், 100 மரக்கன்றுகள்; பல்லடம் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் வேப்பம்கொட்டபாளையம் கிராமத்தில் 100; அவிநாசி பேரூராட்சி, தாமரை குளம் பகுதியில் 100 மரக்கன்று என, நேற்றும் இன்றும் மொத்தம் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.பார் கவுன்சில் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக்குழு செயலாளர் சபீனா பேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, காங்கயம் துளிகள் அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ