உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா

3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா

'வெற்றி' அறக்கட்டளையில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த வாரம், மூன்று லட்சம் என்ற இலக்கு தாண்டியது. நேற்றைய நிலவரப்படி, 3.20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்று நட்டு வைக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டத்தின், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் நிறைவு விழா, உடுமலை அமராவதி நகரில் உள்ள, சைனிக் பள்ளி வளாகத்தில் இன்று நடக்கிறது. சைனிக் பள்ளி முதல்வர் மணிகண்டன், வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி