தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
நல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 55; பனியன் தொழிலாளி. பத்து வயது பள்ளி மாணவியிடம் கடந்த, 2022 ம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.