உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

கத்தி - கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

திருப்பூர்; திருப்பூர் - பி.என்., ரோடு, சந்தோஷம் லே-அவுட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் சந்தேகப்படும் வகையில், ஐந்து வாலிபர்கள் தங்கியிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.வடக்கு போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த மூன்று வாலிபர்களிடம் விசாரித்ததில், பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிபிரசாத், 29, பிச்சம்பாளையத்தை சேர்ந்த சார்லஸ் பென்னி, 29 மற்றும் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அருண்குமார், 28 என்பது தெரிந்தது. சோதனையில், பட்டா கத்தி, அரிவாள் என, இரண்டும், ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'வாடகைக்கு எடுத்த வீட்டில் இருவர் மட்டும் தங்கியிருந்தனர். அவ்வப்போது வாலிபர்கள் சிலர் வந்து செல்வது தெரிந்தது. ஐந்து பேர் இருந்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு தகவல் அளித்தனர். சோதனையில், இரண்டு பேர் சென்ற நிலையில், மூன்று பேர் மட்டும் இருந்தனர். அவர்களிடமிருந்து, கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை