உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனைக்கு ஒரே நாளில், 3,021 பேர் வருகை

அரசு மருத்துவமனைக்கு ஒரே நாளில், 3,021 பேர் வருகை

திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது.கடந்த சில தினங்களாக திருப்பூரில் குளிரின் தாக்கம் அதிகமாகியுள்ளது. இரவு 10:00 மணிக்கு துவங்கி நள்ளிரவு, அதிகாலையில் எதிரே, 50 மீ., க்குள் வருவோர் கூட தெரியாத அளவு கடும்பனி மூட்டம் நிலவுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாகியுள்ளதால், வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சளி, இருமல், சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.கடும் குளிர் காரணமாக பலருக்கும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை நாடி வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வழக்கமாக, புறநோயாளிகள் பிரிவுக்கு, 2,300 முதல் 2,800 பேர் வருவர். நேற்று, அதிகபட்சமாக, 3,021 பேர் வந்தனர். திருப்பூர் நகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுதும் இருந்து உயர் சிகிச்சைக்கு வருவதால், புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புறநோயாளிகளில், 70 சதவீதம் பேர் டாக்டர் ஆலோசனை பெற்று, மருந்து, மாத்திரை வாங்கி செல்கின்றனர். தற்போது, மகப்பேறு வார்டு உட்பட அனைத்து வார்டுகளுக்கும் சேர்த்து, 867 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு மருத்துவக் கல்லுாரி 'டீன்' முருகேசன் கூறியதாவது: நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், புறநோயாளிகள் பிரிவு கூடுதலாக தற்காலிக பணியாளர், ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு டாக்டர், சிறப்பு நிபுணர்கள் நாள் ஒன்றுக்கு, 150 முதல், 200 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியுள்ளது. இயன்றவரை விரைவாக பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. திரும்பத்திரும்ப, மருந்து மாத்திரை பெற வருவோரை, 2 டாக்டர், செவிலியர்கள் கண்காணித்து, மாத்திரை வழங்குகின்றனர். தேவை இருப்போரை மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை