உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்

350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட ராயம்பாளையத்தில், 350 பாக்குமரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; இதுவரை, 1.25 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசி ராயம்பாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணியம் - நாச்சம்மாள் தம்பதியருக்கு சொந்தமான ஆலாங்காடு தோட்டத்தில், நேற்று 350 பாக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர் குடும்பத்தினர் சதாசிவம், புனிதவதி, வித்யுகி, சம்ரித் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை