உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷனில்  3வது நுழைவாயில்

ரயில்வே ஸ்டேஷனில்  3வது நுழைவாயில்

திருப்பூர்: திருப்பூரில் ரயிலை விட்டு இறங்கி, ஸ்டேஷன் விட்டு வெளியே செல்லும் பயணிகள் சிரமமின்றி வெளியேறி செல்ல வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷனில் மூன்றாவது நுழைவாயில் தற்காலிகமாக திறக்கப்பட்டது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்ம் வழியாக பயணிகள் வெளியே செல்ல இரண்டு வழிகள் உள்ளன. புஷ்பா தியேட்டர் ரவுண்டானா சந்திப்பு, குமரன் நினைவிடம் மற்றும் தலைமை தபால் நிலையம் வழியாக பயணிகள் வெளியேறுகின்றனர். ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்கும் ஒட்டுமொத்த பயணிகளும் ஒரே வழியில் வெளியே செல்லும் போது தேவையற்ற சிரமம், இடையூறு ஏற்படுகிறது.இந்த சிரமங்களை தவிர்க்க 'அம்ரூத் பாரத்' திட்டத்தில், மூன்றாவதாக ஒரு நுழைவாயில் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணி ஜன., மாதம் துவங்கியது. தற்காலிகமாக, ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எதிரில், லிப்ட் பின்புறம் இரும்பு படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. முதல் பிளாட்பார்மில் இருந்து படிக்கட்டு வழியாக பயணிகள் கிழே இறங்கிச் செல்ல முடியும்.அதே நேரம், தற்காலிக வழி டூவீலர் ஸ்டாண்ட் செல்லும் வகையில் உள்ளதால், அனைத்து பயணிகளும் இதன் வழியாக வெளியேற முடியுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. தற்போதுள்ள இரண்டு நுழைவாயிலில் டிக்கெட் பரிசோதனை நடக்கும் நிலையில், தற்காலிக வழி வாயிலாக பயணிகள் இறங்கிச் சென்று விட்டால், டிக்கெட் பரிசோதிப்பது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி