சீர் மரபினர் நலவாரிய பதிவு மாவட்டத்தில் 4 நாள் முகாம்
திருப்பூர்; சீர் மரபினர் நலவாரிய பதிவுக்கு, மாவட்டம் முழுவதும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம், விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.சீர்மரபினர், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட, அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்.திருப்பூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை தாலுகா அலுவலகங்களில், வரும் 3, 10, 24, 31 ஆகிய நான்கு நாட்கள், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.முகாமில், சீர் மரபினர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு. ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்க தவறியோர்,மீண்டும் பதிவு செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.