உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  40 ஆயிரம் டன் குப்பைகள் மாநகரில் சுகாதார சீர்கேடு

 40 ஆயிரம் டன் குப்பைகள் மாநகரில் சுகாதார சீர்கேடு

திருப்பூர்: மாநகராட்சி பகுதியில் குவிந்து கிடக்கும் 40 ஆயிரம் டன் குப்பையை அகற்றும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி சார்பில் ஆலோசனை நடந்தது. திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. கோர்ட் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்குகள் குப்பைக்கான நிரந்தர தீர்வை நோக்கி நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சிக்கு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குப்பைகள் பாறைக்குழிகளுக்கு கொண்டு செல்லப்படாமல் நகரம் முழுவதும் தேங்கிக் கிடக்கிறது.தற்போது ஏறத்தாழ 40 ஆயிரம் டன் குப்பை நகரம் முழுவதும் தேங்கிக் கிடக்கிறது. சேகரமாகும் குப்பையில் இறைச்சி கழிவுகள்; தரம்பிரித்த குப்பைகளில் மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கும், மக்கும் குப்பைகள் உரம் மற்றும் மின்சார உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இது போன்ற சில நடவடிக்கைகள் தற்போது, ஏராளமான குப்பைகழிவுகளை அகற்றும் வகையில் உதவி வருகிறது. ஆனாலும், கடந்த ஒரு மாதமாக நகரம் முழுவதும் தேங்கிக் கிடக்கும், தரம் பிரிக்கப்படாத குப்பை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இதை அப்புறப்படுத்தும் வழிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித், துணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், மாநகர சுகாதார பிரிவினர் மற்றும் கோவை, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மற்றும் சிங்கப்பூரில், குப்பைகள் தரம் பிரிக்கும் நடைமுறை குறித்து அந்நிறுவனத்தினர் விளக்கினர். எந்த வகையான கழிவுகள், எவ்வளவு எடையுள்ள குப்பைகள், எவ்வளவு நாட்களில் கையாள முடியும் என்பது குறித்தும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கான திட்ட செயல்பாடுகள் குறித்தும் படக்காட்சி மூலம் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை