உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஓட்டல் சூறை 5 பேர் கைது

 ஓட்டல் சூறை 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டியை சேர்ந்தவர் பாலு என்பவ ரின் ஓட்டலில், நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு போதையில் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கவுதம், 25 என்பவர் சாப்பிட சென்றார். சிக்கன் ரைஸ் வழங்க தாமதமானதால், நண்பர்களை வரவழைத்து, கணக்காளர் ஜாகீர், 40, மாஸ்டர் பாண்டியன், 50 ஆகியோரை தாக்கி, கடையில் இருந்த பொருட் களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக , கவுதம், மணிகண்டன், 24, சஞ்சய், 22, பிஜேஷ், 23 மற்றும் நவீன், 22 என, ஐந்து பேரை வீரபாண்டி போலீசார் கைதுசெய்தனர். கவுதம், மணிகண்டன் மீது பழைய வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்