நாய்கள் கடித்து 5 ஆடு பலி
திருப்பூர் : காங்கயத்தில், நாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் இறந்தது. பத்து ஆடுகள் காயமடைந்தது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலை ஊராட்சி, ராமபட்டினத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 65; விவசாயி. இவர் தோட்டத்தில், 25 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், தங்களது பட்டியில் செம்மறி ஆடுகளை அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, 6:00 மணிக்கு சென்று பார்த்த போது, அப்பகுதியில் உள்ள நாய்கள் செம்மறி ஆடுகளை கடித்துள்ளது. இதில், இரண்டு ஆடு, மூன்று குட்டிகள் இறந்தது. பத்து ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது.