உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடைந்த சிலையை மாற்ற 5 ஆண்டுகளா? செஞ்சேரிமலை கோவிலில் அவலம்

உடைந்த சிலையை மாற்ற 5 ஆண்டுகளா? செஞ்சேரிமலை கோவிலில் அவலம்

பல்லடம் : செஞ்சேரிமலையில் உள்ள முருகன் சிலை உடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதை மாற்றி அமைக்காமல், அறநிலையத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக, பக்தர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலை, பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் வழியில், குழந்தை குமாரர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு குழந்தை வடிவில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் சிலை, சில ஆண்டுக்கு முன் உடைந்தது. ஆனால், இன்னும் அது மாற்றப்படவே இல்லை.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுக்கு முன், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் குழந்தை குமாரர் சிலை சேதப்படுத்தப்பட்டது. உடைந்த சிலையை வழிபடக்கூடாது என்பதால், சன்னதிக்கு பூட்டு போடப்பட்டது. அது நடந்து, ஐந்து ஆண்டாகியும், இன்று வரை சிலை மாற்றி அமைக்கப்படவில்லை.இதற்கிடையே, கோவில் கும்பாபிஷேகமும் நடந்து முடிந்து விட்டது. உடைந்த சிலையை மாற்றாமலேயே அறநிலையத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேகத்தையும் நடத்தி விட்டனர். அதிகாரிகளின் இச்செயல் வேதனையை அளிக்கிறது. எனவே, உடைந்த சிலையை உடனடியாக மாற்றி அமைத்து, குழந்தை குமாரர் சன்னதியை பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கோவில் செயல் அலுவலர் ராஜகுருவிடம் கேட்டதற்கு, ''சிலையை மாற்றி அமைப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், அதற்கான உபயதாரர்களும் தயாராக உள்ளனர். விரைவில், உடைந்த சிலை மாற்றி அமைக்கப்படும்,'' என்று சமாளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
செப் 22, 2024 12:24

இந்துசமய துரோகத்துறையில் அந்நியமதத்தினர் பணிபுரிவதால் இந்த நிலைமை திருப்பதி நிலைமை இங்கே ஏற்கனவே வந்துவிட்டதை போலவே இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை