உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 54வது ஆண்டு துவக்க விழா: அ.தி.மு.க., கொண்டாட்டம்

54வது ஆண்டு துவக்க விழா: அ.தி.மு.க., கொண்டாட்டம்

திருப்பூர்: அ.தி.மு.க., வின், 54ம் ஆண்டு துவக்கவிழா, மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் முன்னிலையில், கட்சியினருக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா, பகுதி செயலாளர்கள் ஹரிஹரசுதன், முத்து, கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை