மேலும் செய்திகள்
'ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்'
20-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த 'குரூப் - 4' தேர்வை, 6,395 பேர் எழுதவில்லை.தர்மபுரி மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்விற்கு, 45,095 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில், 150 தேர்வு மையங்களில், காலை, 9:30 முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வை கண்காணிக்க, 9 பறக்கும் படை அலுவலர்கள், 32 மொபைல் யூனிட் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 150 ஆய்வு அலுவலர்கள் மற்றும், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று நடந்த தேர்வில், 6,395 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 38,700 பேர் தேர்வெழுதினர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார்.
20-Jun-2025
16-Jun-2025