உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினர் 7 பேர் கைது

வங்கதேசத்தினர் 7 பேர் கைது

திருப்பூர்:திருப்பூரில் முறை கேடாக தங்கியிருந்த, ஏழு வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், சிறுபூலுவபட்டி, காவிலிபாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, பரூக், 32, அனமுல், 29, முகமது ஷாபூன் மியாக், 26, முகமது நருனோபி, 35 மற்றும் முகமது சமிம், 37, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைதுசெய்தனர். அதேபோல், நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட் பட்ட கே.செட்டிபாளையம், வசந்தம் நகரில் முறைகேடாக தங்கியிருந்த வங்க தேச நபர்களான ஜிபோன் கான், 27 மற்றும் பப்பு அகமது, 24, ஆகிய இரு வரையும் நல்லுார் போலீசார் கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி