உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 7 லட்சம் தொழிலாளரை பி.எப். திட்டத்தில் இணைக்க வேண்டும்

7 லட்சம் தொழிலாளரை பி.எப். திட்டத்தில் இணைக்க வேண்டும்

திருப்பூர்: ''திருப்பூரில், குறைந்தபட்சம், ஏழு லட்சம் தொழிலாளர்களை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும்,'' என, கமிஷனர் அபிேஷக் ரஞ்சன் பேசினார். 'விக்ஸித் பாரத்' திட்டம் மற்றும் பணியாளர்கள் சேர்க்கை முகாம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது. பொதுசெயலாளர் திருக்குமரன் தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை குழு சிவசுப்பிரமணியம் வரவேற்றார். திருப்பூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேலுமணி, 'விக்ஸித் பாரத்' திட்டம் என்பது, தொழிலாளர்கள் பாதுகாப்பு, உடல்நலம், சுகாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியது. ஓய்வுக்கு பிறகு தொழிலாளர்களின் வாழ்க்கை முறை நன்றாக இருக்கும் வகையில், மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது,'' என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செய லாளர் திருக்குமரன் பேசுகையில், ''தொழிலாளர்கள் மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தால் பயன்பெறலாம். இதேபோல், பி.எப்., அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். ஜவுளிக்குழுவின் துணை இயக்குனர் கவுரி சங்கர், ''சமர்த் திட்டத்தை செயல்படுத்தியதில், திருப்பூர் மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் நபர்கள், பயிற்சி முடித்ததும் உறுதியான வேலை வாய்ப்பை பெறுகின்றனர். அதேபோல், இ.பி.எப்., கணக்கு துவக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி, முதன்முதலாக வேலைக்கு வரும் பணியாளருக்கு அரசு சலுகைகளை கொண்டு சேர்க்க வேண்டும்,' என்றனர். வருங்கால வைப்பு நிதி நிறுவன திருப்பூர் கமிஷனர் அபிேஷக் ரஞ்சன் பேசுகையில், ''மத்திய அரசு, தொழிலாளர்களும், தொழில் நிறுவன உரிமையாளரும் ஒரே நேரத்தில் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருப்பூரில், எட்டு லட்சம் தொழிலாளர் உள்ளனர்; ஆனால், பி.எப்., கணக்கில் இணையும் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம், ஏழு லட்சம் தொழிலாளர்களை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும். அரசு திட்டங்களால் தொழிலாளர் நன்மை பெற, பதிவு முகாம் நடத்தப்படும்,'' என்றார். அமலாக்க அலுவலர் வாசுதேவன், விக்ஸித் பாரத் திட்டம் குறித்து விளக்கி பேசினார். ஏற்றுமதியாளர் சங்க தொழிலாளர் நலன் துணைக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை