உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூர் சிட்டி போலீசுக்கு 7 பிங்க் ரோந்து வாகனம்

 திருப்பூர் சிட்டி போலீசுக்கு 7 பிங்க் ரோந்து வாகனம்

திருப்பூர்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதல்வர் வழங்கிய 'பிங்க்' ரோந்து வாகனம், திருப்பூருக்கு நேற்று வந்தது. போலீசார் சார்பில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டுக்காக, 12 கோடி ரூபாய் செலவில், 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களின் சேவையை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்தந்த மாநகர போலீசாருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகருக்கு வழங்கப்பட்ட, ஏழு 'பிங்க்' ரோந்து வாகனங்கள் நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனங்கள், மாநகரில் வலம் வர உள்ளது. புதிய வாகனங்களை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். முறையாக பராமரிக்கஅறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை