உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாதம் 70 லி., தாய்ப்பால் சேகரிப்பு; ரோட்டரி செலிப்ரேஷன் சேவை

மாதம் 70 லி., தாய்ப்பால் சேகரிப்பு; ரோட்டரி செலிப்ரேஷன் சேவை

திருப்பூர்; அவிநாசியை சேர்ந்த ரூபா செல்வநாயகி, தாய்ப்பால் தானம் வழங்கும் சேவையை துவக்கி, 'அமிர்தம் தாய்ப்பால் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நிறுவினார். ரோட்டரி நிர்வாக செயலாளர் வெங்கடேஷ் ஆலோசனையில், திருப்பூர் ரோட்டரி செலிப்ரேஷன் பட்டய தலைவர் மெல்வின் பாபு, செயலாளர் மணிகண்டன் ஆகியோர் இந்த சேவைக்கு ஆதரவளித்து, ரூபா செல்வநாயகியை ரோட்டரி கவுரவ உறுப்பினராக்கினர். கடந்த ஐந்தாண்டாக, மாதம் ஒரு முறை திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தாய்மார்கள் சேகரித்து வைத்திருக்கும் தாய்ப்பாலை வாங்கி, ரோட்டரி உறுப்பினர்கள் பூபதி, செந்தில் வாயிலாக, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் ஒப்படைத்து வருகின்றனர். மாதந்தோறும், 60 முதல், 70 லி., தாய்ப்பால் சேகரித்து வழங்கப்படுகிறது. திருப்பூர் ரோட்டரி செலிப்ரேஷன் 2025 -2026ன் தலைவர் டாக்டர் சதீஷ்குமார் கூறியதாவது: தாய்ப்பால் தானம் வழங்கும் தாய்மார் எண்ணிக்கையை அதிகப்படுத்த, மாதந்தோறும் சேகரிப்பு மற்றும் வினியோகத்தை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தாய்ப்பால் தானம் வழங்க விரும்பும் தாய்மார்கள், 96779 77731, 96779 77736, 96779 77739 என்ற எண்களில் அழைத்தால், வீடுகளுக்கு வந்து, சுகாதார முறையில் தாய்ப்பால் சேகரிக்க ஏற்பாடு செய்து தருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி