உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 72 போலீசார் இனி ஏட்டய்யா

72 போலீசார் இனி ஏட்டய்யா

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் பணியாற்றி வந்த முதல் நிலை போலீசார்,72 பேர், போலீஸ் ஏட்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.இரண்டாம் நிலை போலீசாக, பத்து ஆண்டு பணி முடித்த பின்,முதல் நிலை போலீசாகவும், அடுத்து, ஐந்தாண்டு பணி முடித்த பின்,போலீஸ் ஏட்டாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.பணிக்காலத்தில், குற்ற செயல் ஏதும் புரியாமல் இருந்தால், பத்து ஆண்டு நிறைவு செய்ததும், சிறப்பு எஸ்.ஐ., (எஸ்.எஸ்.ஐ.,) பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் முதல் நிலை போலீசாராக பணியாற்றி வந்த, 72 பேர், போலீஸ் ஏட்டாக பதவி உயர்வு பெற்றனர்.பதவி உயர்வு பெற்ற போலீசாருக்கு சிறப்பாக பணியாற்ற கமிஷனர் ராஜேந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !