உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணைப்பு ரோட்டில் பாலம் தேவை

இணைப்பு ரோட்டில் பாலம் தேவை

உடுமலை : கிராம இணைப்பு ரோட்டில், உயர் மட்ட பாலம் இல்லாததால், மழைக்காலத்தில், குறிஞ்சேரி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை ஒன்றியம், குறிஞ்சேரி கிராமத்திலிருந்து, சின்னவீரம்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டில், ராஜவாய்க்கால் பள்ளம் குறுக்கிடுகிறது.ஒட்டுக்குளம் உட்பட குளங்களின் உபரி நீர் மற்றும் உடுமலை நகரிலிருந்து வெளியேறும் மழை நீர், ராஜவாய்க்கால் பள்ளத்தில் செல்கிறது. இதனால், மழைக்காலத்தில், இப்பள்ளத்தில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்.அப்போது, குறிஞ்சேரியிலுள்ள தரை மட்ட பாலத்துக்கு மேல், பல அடி உயரத்துக்கு, தண்ணீர் செல்லும் போது, எவ்வித வாகனங்களும் அப்பகுதியை கடந்து செல்ல முடியாது.விளைநிலங்களுக்கு செல்பவர்களும், சின்னவீரம்பட்டி வழியாக, பல்லடம் மாநில நெடுஞ்சாலைக்கு செல்பவர்களும் பல கி.மீ., தொலைவு சுற்றி செல்ல வேண்டும்.இப்பிரச்னைக்கு தீர்வாக, பாலத்தை மேம்படுத்த வேண்டும்; பாலத்தின் மேல் செல்லும் வெள்ளத்தை அளவீடு செய்யும் வகையில், 'ப்ளட் கேஜ்' அமைக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை