எலக்ட்ரிக் வாகனம் ஓட்டவும் உரிமம் அவசியம்!
திருப்பூர்: சுற்றுச்சூழலுக்கு தகுந்த, எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மின் வாகனங்களின் இயக்கம், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதற்காக, பல்வேறு நிறுவனங்கள், சிறப்பம்சங்களை உள்ளடக்கி பைக்குகளின் விற்பனையை அதிகப்படுத்தி வருகின்றன.இதற்காக, ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், டீலர்களும் சில சலுகைகளை அளிக்கின்றனர்.அதேநேரம், விற்பனையை மட்டுமே கருத்தில் கொள்ளும் சிலர் மின் வாகனங்களுக்குஆர்.சி., மற்றும் லைசென்ஸ் தேவையில்லை. ெஹல்மெட் அணிய வேண்டாம் என, தெரிவிக்கின்றனர். அதன்பேரில், பைக் வாங்கிய பலர், போக்குவரத்து நெரிசல் மிக்க ரோடுகளில் ெஹல்மெட் அணியாமலும், விதிமீறியும் பைக்குகளை இயக்கி வருகின்றனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள், 250 வாட்ஸ் வரை பேட்டரி திறன் கொண்ட எலக்ட்ரிக் பைக், ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ.,க்கும் குறைவான ஸ்பீடு மோட்டார், வாகனமாக கருதப்படாது என்பதை தீர்மானிக்கின்றனர்.லைசென்ஸ் வைத்திருப்பது, அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் குறித்து ஓட்டுநர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்கிறது. எந்த இரு சக்கர வாகன காப்பீடு கோரலையும் பெறுவதற்கு, லைசென்ஸ் தேவைப்படுகிறது. எந்த வகையான எலக்ட்ரிக் பைக் ஓட்டினாலும் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.குறிப்பாக, 250 வாட்ஸ்க்கு மேல் உருவாக்கும் மோட்டார் கொண்ட எலக்ட்ரிக் பைக்குகளுக்கு உரிமம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் பைக் மணிக்கு, 25 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தை பெற முடியும் என்றால், லைசென்ஸ் மற்றும் வாகனங்கள் பதிவு அவசியம்.அதே போல, பாதுகாப்பு கருதி, போக்கு வரத்து விதிப்படி, ெஹல்மெட் அணிவதும் கட்டாயமாகும். இதுகுறித்து, எலக்ட்ரிக் வாகன டீலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்களும் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.