உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாட்ஸாப் மூலம் விற்கப்பட்ட லாட்டரி: பரிசு விழுந்ததாக நம்பியவர் ஏமாந்தார்

 வாட்ஸாப் மூலம் விற்கப்பட்ட லாட்டரி: பரிசு விழுந்ததாக நம்பியவர் ஏமாந்தார்

திருப்பூர்: காங்கயத்தை சேர்ந்த, 50 வயது நபர், கேரளா பி.கே. லாட்டரி கேவினேஷ் என்பவரிடம் கடந்த ஆறு மாதமாக வாட்ஸாப் மூலம் லாட்டரியை தேர்வு செய்து வாங்கி வந்தார். இதற்கான பணத்தை யு.பி.ஐ., மூலம் செலுத்தினார். கடந்த, 16ம் தேதி 12 லாட்டரி சீட்டுகளை (ஒரு செட்), 580 ரூபாய்க்கு வாங்கினார். அந்த லாட்டரிக்கு, நான்காவது பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் வீதம், 12 சீட்டுகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்தது. லாட்டரி விற்பனை செய்த நபரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை துண்டித்தார். தொடர்ந்து, லாட்டரி அனுப்பிய வாட்ஸாப் பதிவுகளையும் நீக்கினார். தொடர்ந்து, லாட்டரி வாங்கிய காங்கயத்தை சேர்ந்த நபர், கேரளா மாநிலம், பாலக்காடு சென்று, பி.கே. லாட்டரி நிறுவனத்தை தேடிய போது, அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பது தெரியவந்தது. மேலும், வாட்ஸாப் உள்ளிட்டவற்றில், ஆன்லைன் வாயிலாக பல்வேறு நுாதன முறையில் கேரளா லாட்டரி என்ற பெயரில் மோசடி கும்பல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. இதை போலீசார் கண்காணித்து, ஆன்லைன் மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை