உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்

கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்

திருப்பூர்: தாராபுரம் தாலுகா, மாம்பாடி கிராமத்தில் உள்ள மாந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 113.46 ஏக்கர் நிலம் உள்ளது. புன்செய் நிலத்தில் (சர்வே எண்67/2) குமாரசாமி கோட்டை என்ற ஊரை சேர்ந்த சுரேஷ் மற்றும் குழுவினர், கிராவல் மண் வெட்டி எடுப்பதாக தகவல் கிடைத்தது.கோவில் தக்கார் மல்லிகா மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று, முறைகேடாக மண் அள்ளப்படுவது குறித்து, தாசில்தாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, தடுக்கப்பட்டது. இந்நிலையில், மண் திருடியது குறித்து அளவீடு செய்து கொடுக்குமாறு, வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து கிராவல் மண் எடுதை்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு, மூலனுார் போலீசில் புகார் அளித்துள்ளதாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை