உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏரிப்பாளையத்தில் ரவுண்டானா தேவை; கிடப்பில் போடப்பட்டது கோரிக்கை

ஏரிப்பாளையத்தில் ரவுண்டானா தேவை; கிடப்பில் போடப்பட்டது கோரிக்கை

உடுமலை : ஏரிப்பாளையம் ரோடு சந்திப்பில், ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஏரிப்பாளையம் அருகே, செஞ்சேரிமலை ரோடு பிரிகிறது. இந்த சந்திப்பு பகுதியில், விபத்துகளை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலையில், அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றப்பட்டு விட்டது.இதனால், உடுமலையில் இருந்து பல்லடம் செல்லும், வாகனங்கள் வேகமாக செல்லும் போது, செஞ்சேரிமலை ரோட்டில், வாகனங்கள் பிரிய சிக்கல் ஏற்படுகிறது.இதேபோல், பெதப்பம்பட்டி உள்ளிட்ட வழித்தடங்களில், வரும் பஸ்கள் சந்திப்பு பகுதியில், நிறுத்தி, பயணியரை ஏற்றும் போது, பிற வாகனங்கள் செல்ல முடியாமல், நெரிசல் அதிகரிக்கிறது.சந்திப்பு பகுதியில், நெரிசலை தவிர்க்க, முன், போக்குவரத்து போலீஸ் சார்பில், பிளிக்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.இதனால், செஞ்சேரிமலை ரோட்டில், வரும் வாகனங்களை வேகத்தை குறைத்த பின்னர், மாநில நெடுஞ்சாலையில், இணைந்து வந்தன. இந்த சிக்னலும் காட்சிப்பொருளாக மாறி, தற்போது காணாமல் போய் விட்டது.எனவே, ஏரிப்பாளையம் சந்திப்பு பகுதியில், நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக, ரவுண்டானா அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தியும், கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.மேலும், மாநில நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடை மற்றும் செஞ்சேரிமலை ரோட்டில் மாயமான சிக்னலை மீண்டும் அமைக்கவும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ