உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் விசேஷ தினங்கள்; மீன்கள் விற்பனை மந்தம்

தொடர் விசேஷ தினங்கள்; மீன்கள் விற்பனை மந்தம்

திருப்பூர்; இன்று சித்ராபவுர்ணமி, நேற்று குருபெயர்ச்சி உள்ளிட்ட அடுத்தடுத்த விசேஷ தினங்களால் நேற்று மீன் விற்பனை மந்தமானது.ஞாயிறு என்றாலே திருப்பூர் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் விற்பனை களைகட்டும்; நாள் முழுதும், 40 - 60 டன் மீன் விற்றுத்தீரும். மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடந்த இரு வாரங்களாக, மீன் வரத்தும், விற்பனையும் சற்று குறைந்திருந்தது.விலை குறைந்தபோதும், வாங்க ஆளில்லாமல் மீன் விற்பனை சற்று குறைந்தது. நேற்று மார்க்கெட்டில் வியாபாரிகள் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.வழக்கமாக, அதிகாலை துவங்கி காலை 10:00 மணிக்குள், 20 டன் மீன் விற்றுத்தீர்ந்து விடும். நேற்று, 15 டன் மீன் மட்டுமே விற்றது.மீன் வியாபாரிகள் கூறுகையில், 'குருபெயர்ச்சி கோவில்களில் விசேஷம், இன்று சித்ராபவுர்ணமி பூஜை என்பதால், வாடிக்கையாளர் கூட்டம் குறைவாக இருந்தது. எதிர்பார்த்த விற்பனை இல்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ