உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்சிப் பொருளான குப்பை மறுசுழற்சி மையம்

காட்சிப் பொருளான குப்பை மறுசுழற்சி மையம்

பொங்கலுார் ஊராட்சியில், 10,000 பேர் வசிக்கின்றனர். ஊராட்சியில் சேகரமாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்து, குப்பைகளற்ற ஊராட்சியாக மாற்ற பொங்கலுார், தேவனம்பாளையத்தில் பிளாஸ்டிக் கழிவு அரைக்கும் தொழிற்சாலை கட்டப்பட்டது. ஊராட்சி முழுக்க சேகரமாகும் குப்பைகளை கொண்டு வந்து அரைத்து பொடியாக்கி விற்பனை செய்வதுதான் திட்டம். இதற்கு மகளிர் சுய உதவி குழுவினர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் கழிவுகளை கிலோ ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டமும் இருந்தது. பொதுமக்களிடமும் வரவேற்பு இருந்தது.அது கட்டப்பட்ட பகுதி விவசாய பகுதி ஆகும். அங்கு மும்முனை மின்சாரம் கிடைப்பது அரிது. பகலில் சில மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கும். இருமுனை மின்சாரத்தில் தொழிற்சாலையை இயக்க முடியவில்லை. இயந்திரங்கள் அடிக்கடி பழுதாயின. ஆர்வமாக வேலை பார்க்க சென்ற மகளிர் சுய உதவி குழுவினரால் அதை இயக்க முடியவில்லை.பிளாஸ்டிக் கழிவு மறு சுழற்சி மையம் பயன்பாடு இன்றி மூடப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே மக்கும் குப்பைகளை உரமாக்கும் உரக்கிடங்கு கட்டப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பு இன்மையால் அதில் மேற்கூரை பெயர்ந்து, பயன்பாடு இன்றி கிடக்கிறது. தற்போது மக்கும் குப்பை தயாரிக்கும் உரக்கூடத்தில் ஆலமரம் வளர்ந்துள்ளது.இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் பிற ஊராட்சிகளுக்கும் இதை விரிவு படுத்தி சுத்தமான பகுதியாக மாற்றுவதற்கு முன் உதாரணமாக அமைந்திருக்கும். ஆரம்பித்த இடத்திலேயே தோல்வி ஏற்பட்டதால் திட்டம் முடங்கி விட்டது.இதனால் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி