வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவிங்க வேறே.. அந்நிய அடையாளங்களை எப்பிடி அழிக்குறதாம்?
திருப்பூர்: பிரிட்டன் நாட்டுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகமும் பல மடங்கு உயரும் என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு நாடும், இறக்குமதி செய்வதை காட்டிலும் ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க வேண்டுமென விரும்புகின்றன. ஒவ்வொரு பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாடுகளை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. நாடுகளிடையே, பரஸ்பரம் வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி, வரிச்சலுகையை உருவாக்கி கொள்கின்றன. உலக நாடுகளிடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முழு வரிவிலக்கு அளிக்க இயலாத பொருட்களுக்கு வரிச்சலுகையும் கிடைக்கிறது. வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், கொரியா, ஐஸ்லாந்து, மொரீசியஸ், நெதர்லாந்து உட்பட, ஒன்பது நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன.நம் நாட்டின், அதிகபட்ச ஆயத்த ஆடை ஏற்றுமதி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் நடக்கிறது. வளர்ந்த நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது, இருதரப்பு நாடுகளும் ஏராளமான நன்மைகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய அதிகாரிகள் அடங்கிய குழு அதுதொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தற்போதைய சூழலில், பிரிட்டனுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.நாட்டின் பின்னலாடை தலைநகராகிய திருப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனுடன் அதிக அளவு வர்த்தகம் செய்து வருகிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் போது, திருப்பூரின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்கும் என்பது, பின்னலாடை தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு வழிகாட்டும். இருப்பினும், இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒப்பந்தம் தயாரிக்கப்படும்; பலகட்ட பேச்சுவார்த்தையால் அது இறுதி செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் பிரிட்டன் பேச்சு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. சீனா மற்றும் வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்யும் முன்னணி வர்த்தக நிறுவனங்கள், தடையில்லா வர்த்தகத்துக்கு இந்தியாவையும் நாடிவரத்துவங்கி உள்ளன. புதிய வர்த்தக வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானால், தற்போதைய ஏற்றுமதி வர்த்தகம், பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
இவிங்க வேறே.. அந்நிய அடையாளங்களை எப்பிடி அழிக்குறதாம்?