வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீப்பிடித்தது
அவிநாசி: கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இருந்து தெக்கலுார், வெங்கல்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வைக்கோல் ஏற்றி வந்தது. லாரி தாழ்வான மின் கம்பிகளில் உரசியதால் தீ பற்றியது. அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரி சேதமின்றி தப்பியது.