உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை மாத்திரையுடன் இளைஞர்; கரம் தடுக்க இயலாமல் தவிக்குது இரும்புக்கரம்

போதை மாத்திரையுடன் இளைஞர்; கரம் தடுக்க இயலாமல் தவிக்குது இரும்புக்கரம்

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள், நேரடியாகவும், கூரியர் வாயிலாகவும் பெங்களூரு, நாக்பூர், மும்பை போன்ற இடங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பெறுவது அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதில் இரும்புக்கரங்கள் பாய்வதில் சிக்கல் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.திருப்பூரில், குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த, மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போதையின் பின்பிளைவுகளை தெரியாத இளைஞர்கள், அதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.சமீப காலமாக வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்தனர். தற்போது, போலீஸ் கெடுபிடி அதிகரித்ததால், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்கி வருதல், ஆன்லைன் மூலம்ஆர்டர் செய்து வாங்குதல் என தங்கள் 'ரூட்'டை மாற்றியுள்ளனர். கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பார்சல்களை போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.போலீசார் கூறியதாவது:உள்ளூரில் கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்கப்படுவதால், வெளி மாநிலங்களுக்கு சென்று வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட சிலர், இந்த மாத்திரைகளை பெங்களூரு, நாக்பூர், மும்பை போன்ற நகரங்களில் இருந்து 'ஆன்லைனில்' ஆர்டர் செய்து கூரியரில் பெற்றுள்ளனர். அங்கிருந்து சப்ளை செய்யப்படும் நபர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் அங்கு தெரியப்படுத்தி தான் நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும், வேறு வகையில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி