உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதியோர் ஓய்வூதியம் திட்டத்தில் மாற்றம் உதவி மையங்களை அணுகலாம்

முதியோர் ஓய்வூதியம் திட்டத்தில் மாற்றம் உதவி மையங்களை அணுகலாம்

உடுமலை: முதியோர் ஓய்வூதியம், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது. வங்கிக்கணக்கில், ஆதார் இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியத் திட்டங்களில், உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, செப்., முதல் ஆதார் அடிப்படையில் வங்கிகளில் தொகை செலுத்தப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களின் கீழ், உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, மத்திய அரசு உத்தரவு அடிப்படையில், செப்., முதல், பணப்பரிவர்த்தனைகள், ஆதார் அடிப்படையிலான முறையில் அமல்படுத்தப்படுகிறது. நடப்பு மாதம் முதல் பயனாளிகளுக்கான தொகை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, வங்கிக்கணக்குடன், ஆதார் எண் இணைக்காதவர்கள், தங்களது வங்கியை அணுகி, ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, தாலுகா அலுவலகங்களிலுள்ள, சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள, உதவி மையங்களை அணுகலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !