உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு

ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு

- நமது நிருபர் -இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வாயிலாக, தபால் நிலையங்களில், 1,200 ரூபாயில், ஆண்டுக்கு பத்து மற்றும் 15 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியிருப்பதாவது:அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில், கிராம அஞ்சல் ஊழியர்கள் வாயிலாக, மிக குறைந்த பிரிமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை அறிந்து கொள்ள வரும், 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை