மேலும் செய்திகள்
தாறுமாறு வாகனங்கள் தடுமாறும்
16-Dec-2024
ஒளிராத விளக்குகள்... ஓயாத நாய் தொல்லை!
26-Nov-2024
சாலை சேதம்திருப்பூர், இரண்டாவது மண்டலம் அலுவலகம் முன், லட்சுமி நகரில் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடும் முன், சீர் செய்ய வேண்டும்.- முத்துக்குமார், லட்சுமி நகர். (படம் உண்டு)பெருமாநல்லுார், பிச்சம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சாலை சேதமாகியுள்ளது. தினசரி ஒரு விபத்து நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்வதில்லை.- மனோகர், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)சகதியுடன் சாலைபல்லடம், சேகாம்பாளையம், நாரணாபுரம் கிராமத்தில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழைநீர் வெளியேற வழியில்லாத நிலை உள்ளது.- தியாஷ், சேகாம்பாளையம். (படம் உண்டு)எரியாத விளக்குமங்கலம் ரோடு, பாரப்பாளையம் - ராயபுரம் தீபம் பாலம் சந்திப்பு சாலையில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)மூடி சேதம்கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், ஒலிம்பிக் பேக்கரி வீதியில், பாதாள சாக்கடை மூடி சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- சுரேஷ், கே.வி.ஆர்., நகர். (படம் உண்டு)ரியாக் ஷன்குழாய் சீரானதுஅங்கேரிபாளையம், நீதி அம்மாள் நகர் இரண்டாவது வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடியதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குழாயை மாற்றி அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.- மனோகர், நீதி அம்மாள் நகர். (படம் உண்டு)தற்காலிக தடுப்புஎஸ்.பெரியபாளையம், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி சந்திப்பில் குப்பை தேங்கியிருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குப்பைகளை அள்ளிவிட்டு அவ்விடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க, தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர்.- ரங்கசாமி, ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி. (படம் உண்டு)புதிய சாலைதிருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் எம்.ஜி., புதுார் மூன்றாவது வீதி சாலை குண்டும் குழியுமாக இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் புதிய தார் ரோடு போடப்பட்டு விட்டது.- அருணா, எம்.ஜி., புதுார். (படம் உண்டு)
16-Dec-2024
26-Nov-2024