உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கனிம வளக் கடத்தல் விவகாரம் உத்தரவிட்டதும் நடவடிக்கை

 கனிம வளக் கடத்தல் விவகாரம் உத்தரவிட்டதும் நடவடிக்கை

பல்லடம்: பல்லடம் அருகே, கேத்தனுார் கிராமத்தில், கனிம வளம் கடத்தப்பட்டதால், பட்டா நிலம் ஒன்று குட்டையாக உருமாறி உள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பிரசாத் கூறுகையில், 'கேத்தனுாரில், மண் கடத்தப்பட்டதாக கூறப்படும் பட்டா நிலத்தில், கடந்த, நவ., 27ம் தேதியே ஆய்வு செய்யப்பட்டது. அதில், 3,500 கன மீட்டர் கனிம வளங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வின்போது வாகனங்கள் அங்கு இருந்தால்தான் பறிமுதல் செய்து விசாரிக்க முடியும். ஆனால், ஆய்வின்போது வாகனங்கள் எதுவும் இல்லை. மேலும், சம்பந்தப்பட்ட இடம், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்பதால், நில உரிமையாளர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ள முடியும் இதன்படி, ஆய்வு அறிக்கை ஆர்.டி.ஓ.,விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி