உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடந்துாருக்கு கூடுதல் பஸ்; அரசுக்கு மக்கள் கோரிக்கை

கோடந்துாருக்கு கூடுதல் பஸ்; அரசுக்கு மக்கள் கோரிக்கை

உடுமலை; உடுமலை - மூணாறு ரோட்டில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து மூணாறுக்கு இயக்கப்படும் பஸ்களில், சின்னாறு செக்போஸ்ட் அருகே இறங்கி, இக்கோவிலுக்கு செல்ல வேண்டும். வனத்துறை வழிகாட்டுதல்படி, வாரத்தின் சில நாட்கள் மட்டும், இக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்நாட்களில், உடுமலையில் இருந்து கோடந்துாருக்கு அதிகளவு மக்கள் செல்கின்றனர். அதற்கேற்ப போதிய சிறப்பு பஸ்கள் இந்த வழித்தடத்தில், இயக்கப்படுவதில்லை. இதனால், மக்கள் பாதிக்கின்றனர். விடுமுறை காலங்களில், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். அதே போல், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, விேஷச நாட்களிலும் கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ