உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொலைதுார நகரங்களுக்கு கூடுதல் பஸ்! உடுமலையில் எதிர்பார்ப்பு

தொலைதுார நகரங்களுக்கு கூடுதல் பஸ்! உடுமலையில் எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலையில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், விடுமுறை நாட்களில் பயணியர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரத்துக்கு, கோவை, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பஸ்கள் இயக்கப்படுகின்றன.தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உடுமலை பகுதியில், வளர்ச்சி அதிகரித்தும், முக்கிய நகரங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, தொழில் நகரமான கோவைக்கும், மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு செல்லவும், உடுமலை பயணியர் தத்தளிக்க வேண்டியுள்ளது.தற்போது கோவைக்கு, பழநியில் இருந்து இயக்கப்படும் பஸ்களில், உடுமலை பயணியர் ஏற முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும், கோவைக்கு செல்ல பயணியர் போராட வேண்டியுள்ளது.பழநியில் இருந்து வரும் போதே, கூட்டம் நிரம்பி வழிவதால், உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், இருந்து கோவைக்கு பஸ் ஏற முடிவதில்லை. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே விடுமுறை தினங்களில், உடுமலையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும், தொலைதுார நகரங்களுக்கும், நெரிசலுடன் பயணித்து வருகின்றனர்.சிலர், பல்லடம் சென்று அங்கிருந்து கோவைக்கு செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால், உடுமலை - பல்லடம் வழித்தடத்திலும், போதிய பஸ்கள் இல்லை.இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆய்வு செய்து, விடுமுறை தினங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.இத்தகைய பஸ்களை இயக்கினால், உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணியரும், நெரிசல் இல்லாமல், கோவைக்கு பயணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ