உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி

அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி

திருப்பூர்; ''எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் இரு அணிகளாக அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்'' என, உலக எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் சைதை துரைசாமி பேசினார்.திருப்பூரில் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் முதல்வர் ஜானகி நுாற்றாண்டு விழாவில், சைதை துரைசாமி பேசியதாவது: திரைப்படங்களில் கூறிய அனைத்து கருத்துகளையும், ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆர்., நிறைவேற்றி காட்டினார். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமாக எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, அவரது மனைவி ஜானகிதான் முதல்வராக வேண்டுமென வற்புறுத்தி, முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம். கட்சி ஜா., - ஜெ., அணிகளாக பிளவுபட்ட பிறகு, வெற்றி வாய்ப்பை இழந்தோம். கட்சி பிளவுபட்டதால், நாமே தி.மு.க.,வுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டோம் என்றும், கட்சியை இணைக்க வேண்டுமெனவும் எடுத்துரைத்தோம்.; கட்சியை இணைத்தோம்; அ.தி.மு.க., இணையாமல் இருந்திருந்தால், இன்னும் இரண்டு அணியாகத்தான் இருந்திருக்கும்.எம்.ஜி.ஆர்., இன்றுவரை கண்ணுக்கு தெரியாத மின்சாரம் போல் மக்களிடம் நீக்கமற நிற்கிறார். எம்.ஜி.ஆர்., கிடைத்தது போல், உலகின் வேறு எந்த திரையுலக பிரமுகர்களுக்கும் செல்வாக்கு கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
டிச 24, 2024 15:56

எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அண்ணாவின் உருவம் பொறித்த அதிமுக கட்சி கொடி இந்த நான்கும் அதிமுக தொண்டர்களை தாண்டி தமிழக மக்கள் மனதுக்கு நெருக்கமான எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். ஆசை யார் வேண்டுமானாலும் படலாம், ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக எப்போதும் தனக்கான தலைமையை தானே கொண்டுவரும் தன்மை கொண்டது. திமுக, மதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போல வாரிசு என்ற கொடிய வைரஸ் தாக்காத கட்சி. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு வி.என்.ஜானகி, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் என்று ஏகப்பட்ட பேர் அதிமுகவை கைப்பற்ற துடித்த போது அது ஜெயலலிதா என்ற பெண்மணியை தலைமை பதவிக்கு கொண்டு வந்தது. எம்ஜிஆர் மறைந்தவுடன் கட்சியை கபளீகரம் செய்யலாம் என்று முயற்சித்த டெல்லிக்காரனுங்க முயற்சி மண்ணை கவ்வியது. அதுபோல ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என்று ஏகப்பட்ட பேர் அதிமுகவை கைப்பற்ற துடித்தபோதும் அது அனைவரையும் துரத்திவிட்டு எடப்பாடி கே பழனிசாமி என்ற மனிதரை தலைமை பதவிக்கு கொண்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை பளீகரம் செய்துவிடலாம் என்று முயற்சித்த டெல்லிக்காரனுங்க முயற்சி இப்பவும் மண்ணை கவ்வியது. ஆனால் ஒரு விஷயத்தில் அதிமுகவின் நிரந்தர எதிரி திமுகவை பாராட்டியே தீரவேண்டும். அன்று ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து, கேவலமாக பேசி கருணாநிதி மற்றும் அல்லக்கைகள் ஜெயலலிதாவை பவர்புல் லீடராக உருவாக காரணமாக இருந்தார்கள். இன்று எடப்பாடி கே பழனிசாமியை கடுமையாக எதிர்த்து பேசி, கேவலமாக பேசி கருணாநிதி மவன் ஸ்டாலின், அவரு மவன் உதயநிதி மற்றும் அல்லக்கைகள் எடப்பாடி பழனிசாமியை பவர்புல் லீடராக உருவாக காரணாமாக இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகால திமுகவின் ஆட்சி அலங்கோலம் என்பது அடுத்த தேர்தலில் அதிமுகவை பலமாக அதிகாரத்துக்கு கொண்டு வரும் என்பது நியதி.


PARTHASARATHI J S
நவ 26, 2024 07:02

அதிமுக அருமையான கட்சி. அம்மா ஆட்சியில் நிறைய நல்லது நடந்தன. மழைநீர் சேமிப்பு, மினிபஸ், போன்றவைகளை சொல்லலாம். எடப்பாடியாரும் நல்லதே செய்தார். பாதுகாக்கப்பட்ட வேளான்மண்டலம் சிறப்பான திட்டம். அமைதி நிலவியது. ரவுடிகள் அடங்கி இருந்தார்கள். திமுக ஆட்சியில் தினமும் கொலை கொள்ளை. பிரதமர் சமிபத்தில் சொன்ன மாதிரி நாம் நல்ல விஷயத்தில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே நல்லது தொடர்ந்து நடக்கும். அரசியல்வாதிகள் அரசுப்பணத்தில் கை வைக்க அஞ்சுவார்கள். சேவை மனப்பான்மை வளரனும். திமுகவின் வெட்டி ஆணவப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கனும். அதிமுக ஒன்றே திமுகவின் வாரிசு அரக்க அரசை ஒடுக்க முடியும்.


chennai sivakumar
நவ 25, 2024 19:34

இனிமேல் அ தி மு க காணாமல் போய் விடும். Guarantee


S. Neelakanta Pillai
நவ 25, 2024 10:33

இணைவதும் பிரிவதும் சுயநலத்திற்காகத்தான். இதில் துளி அளவு கூட மக்கள் நலன் இல்லை. அனைத்து செய்திகளும் மக்கள் பிரதிநிதிகளின் சுயநலங்களைப் பற்றியே பேசுகிறது. எவன் ஜெயித்தாலும் தோற்பது மக்களாகத்தான் இருக்கிறார்கள். மக்களின் நலன்களைப் பற்றி எப்போது பேசப் போகிறார்கள், அதற்கு சாத்தியமே இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை