உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண் பொறியியல் துறை முகாம்

வேளாண் பொறியியல் துறை முகாம்

வேளாண் பொறியியல் துறையின் சிறப்பு முகாம், குண்டடம், ஊதியூர் பழநி பாதயாத்திரை மண்டபத்தில் நேற்று நடந்தது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர். அரசு திட்டக்குழுவினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற முகாமில், வேளாண் கருவிகள் குறித்து, விவசாயிகள் கேட்டறிந்தனர். ஆர்வமுள்ள இளைஞர்கள், வேளாண்பொறியியல் துறை நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. வேளாண் இயந்திரங்கள், முதல்வரின் மின்மோட்டார் மானிய திட்டத்தில், 10 பயனாளிகளுக்கு, 10.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை வழங்கினர்.வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி