உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் புழு உரம் உற்பத்தி வேளாண் துறை அறிவுரை

மண் புழு உரம் உற்பத்தி வேளாண் துறை அறிவுரை

உடுமலை, ;மண் புழு உரம் தயாரித்து பயன்படுத்தும் போது, மண்ணிற்கு உயிர் கொடுப்பதோடு, பயிர்கள் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது:மண் புழு உரம், அங்கக கழிவுகளை, மண் புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகள் அந்த இடத்திலேயே மேம்படச்செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்தும் தொழில் நுட்பமாக மண் புழு உரம் தயாரித்தல் உள்ளது. மக்கும் கழிவுகளை சேகரித்து, அதனை மூட்டம் போட்டு, அதன் மீது சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்க விட்டால், மண் புழுக்கள் சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும். மண் புழுக்கள் உற்பத்தியான பின், அதனை பிரித்து எடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம். சேகரித்த மண் புழு உரத்தை. அதிக வெயில் படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நன்மை தரும் நுண்ணுயிரினங்கள் அதிகளவு வளரும். இதில், அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோனமாஸ் போன்றவை அதிக எண்ணிக்கையில் இருப்பதால், காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து, மண் புழு உரத்தில் நிலை பெறச்செய்கிறது. ஒரு ஹெக்டர் நிலத்திற்கு. 5 டன் மண் புழு உரம் பயன்படுத்த வேண்டும். தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு, ஒரு மரத்திற்கு, 5 கிலோ வீதம், மண்ணின் அடிப்பாகத்தில் இட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை