வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எடப்பாடி தோப்பது உறுதி
பல்லடம்; பல்லடம் வருகை தரவுள்ள முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். நாளை, பல்லடம் என்.ஜி.ஆர்.,ரோட்டில், தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில் பேச உள்ளார். இதை முன்னிட்டு, அ.தி.மு.க,வினர் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோர், பழனிசாமி வருகை தரவுள்ள என்.ஜி.ஆர். ரோட்டை ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்திச் சென்றனர். அதன்படி, கட்சியினர் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். என்.ஜி.ஆர்., ரோட்டில், பிரமாண்ட கொடி கம்பங்கள் நடவு செய்யப்பட்டு, அலங்கார வளைவுகள், பிளக்ஸ் பேனர்கள், லைட்டிங்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், நெடுஞ்சாலை வழிநெடுக, கொடிகளும், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.,வினர் மட்டுமன்றி கூட்டணி கட்சியினரும் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
எடப்பாடி தோப்பது உறுதி