மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
07-Jul-2025
திருப்பூர் : திருப்பூரில் நடக்கும், அ.தி.மு.க., பொதுசெயலாளரின் மக்கள் சந்திப்பு கூட்டம் குறித்து தெருமுனை பிரசாரம் நடத்த, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: பொது செயலாளரின், திருப்பூர் மக்கள் சந்திப்பு இயக்கத்துக்கு முழு அளவில் தயாராக வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் மாவட்டத்துக்கு உப்பட்ட, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம் தொகுதிகளில், தலா ஒரு லட்சம் பேரை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுசெயலாளரின், 'மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்' திட்ட பயணம் குறித்து, பொதுமக்களிடம் விளக்க ஏதுவாக, தெருமுனை பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி (இன்று) துவங்கி, 31ம் தேதி வரையிலும், ஆக., 1, 4, 6 மற்றும் 10ம் தேதிகளிலும், மாநகராட்சி பகுதி மற்றும் திருப்பூர் ஒன்றியத்தில், தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளது. கட்சி பூத் ஏஜன்டுகள், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள், வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது குறித்தும், இக்கூட்டங்கள் வாயிலாக கண்காணிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
07-Jul-2025