மேலும் செய்திகள்
அ.தி.மு.க., காணொலி கலந்துரையாடல்
11-Mar-2025
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க ஜெ., பேரவை சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் போயம்பாளையத்தில் நேற்று காலை நடந்தது.ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். துணை செயலாளர் நீதிராஜன், வார்டு செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.மாநில இணை செயலாளர் குணசேகரன், பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், ஏழைகளுக்கான திட்டங்களான தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், பள்ளி குழந்தைகளுக்கு லேப்-டாப், திருமண உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டன.இந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. 2026ல் மீண்டும் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், வேலுமணி, முத்து, ஹரிஹரசுதன், கனகராஜ், ஜெ.,பேரவை இணை செயலாளர்கள் பழனிசாமி, பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Mar-2025