தடகளப்போட்டியில் மாற்றுத்திறன் மாணவர் வெற்றி
உடுமலை : முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.திருப்பூரில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் கிேஷார் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.இப்போட்டிகளுக்கான பரிசுத்தொகையும், மாணவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. மாவட்ட அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவருக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஆலிஸ்திலகவதி, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் விஜயபாண்டி பாராட்டு தெரிவித்தனர்.