மேலும் செய்திகள்
ஏம்பலம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
01-Nov-2025
உடுமலை: மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சிக்கு, சோழமாதேவி அரசுப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மடத்துக்குளம் அரசுப்பள்ளி வேதியியல் ஆசிரியர் சிவஞானம், காரத்தொழுவு அரசுப்பள்ளி உயிரியல் ஆசிரியர் மணிவண்ணன், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா பள்ளி வேதியியல் ஆசிரியர் நவநீதகுமார் நடுவர்களாக பங்கு பெற்றனர். கண்காட்சியில் மாணவர்களின், 230 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. 'தமிழும் அறிவியலும்' என்ற தலைப்பில் கீழடி மாதிரி ஐவகை நிலங்கள், பனைமரத்தின் பயன்கள் குறித்த கண்காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. 'ஸ்மார்ட்' தொழில் நுட்ப முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகள், இயற்கை வேளாண்மை, காற்று மாசு குறைக்கும் எதிர்கால திட்டங்கள், உறுப்பு மண்டலம், 'நெகிழி' உபயோகத்தின் தீங்கு, செயற்கை கோள் மாதிரிகள் செயல்படும் மாதிரிகள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பெற்றோரும் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் தாளாளர் ராஜ்குமார் தலைமையில், பள்ளியின் தலைமையாசிரியர்கள் லீனா மற்றும் சைலஜா செய்திருந்தனர்.
01-Nov-2025