உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் மோதியதில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

கார் மோதியதில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

தாராபுரம்: தாராபுரத்தில், கார் மோதியதில், தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 35. இவர், விபத்தில் சிக்கினார். காயமடைந்தவரை, தனியார் ஆம்புலன்ஸ் மீட்டு கொண்டு தாராபுரம் அரசு மருத்துவமனை நோக்கி சென்றது. உடுமலை ரோடு, ரவுண்டானா சிக்னல் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.மோதிய வேகத்தில், ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. அருகிலிருந்தோர் ஓடிச்சென்று, ஆம்புலன்ஸ் டிரைவர் பூபதி, 20 மற்றும் கார் டிரைவர் பிரதீப், 31 ஆகியோரை மீட்டனர். ஏற்கனவே, படுகாயம் அடைந்திருந்த செல்வகுமார் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ