உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்மன் கோவில்கள் அருட்கோலம்; ஆடி வெள்ளி வழிபாடு கோலாகலம்

அம்மன் கோவில்கள் அருட்கோலம்; ஆடி வெள்ளி வழிபாடு கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நேற்று, விமரிசையாக நடந்தது. ஆடி மாதம், 2வது வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது; கோவில்கள், வேப்பிலை தோரணம், மலர்மாலைகள், திருவிளக்கு பூஜை என, விழாக்கோலம் பூண்டிருந்தன. பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், நெசவாளர் காலனி ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், கஞ்சம்பாளையம் ஸ்ரீமகாமாரியம்மன், போலீஸ் லைன் மாரியம்மன் என, அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடிவெள்ளி பூஜைகள் அமர்க்களமாக நடந்தது. அதிகாலையில், சிறப்பு அபிேஷகமும், காலை, 10:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, கண்ணாடி வளையல் அலங்கார பூஜை நடந்தது. அம்மனுக்கு ராகிக்கூழ் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை