உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெளிச்சம் தெரியாத சாலை; குழியால் தடுமாறும் வேளை 

வெளிச்சம் தெரியாத சாலை; குழியால் தடுமாறும் வேளை 

கொசுத்தொல்லைபல்லடம் நகராட்சி, 4வது வார்டு, பி.ஆர்., லே-அவுட், குமரன் வீதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. கொசு மருந்து தெளிக்க வேண்டும்.- சேகர், பல்லடம்.வாகனங்கள் இடையூறுதிருப்பூர் தென்னம்பாளையம், காமாட்சி அம்மன் கோவில் வீதியில் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகிறது. பள்ளி வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. போலீசார் கண்காணிக்க வேண்டும்.- அன்பு, தென்னம்பாளையம்.n திருப்பூர், 19வது வார்டு, ஜவஹர் நகர் ஐந்தாவது வீதியில் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகிறது. கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற போலீசார் முன்வர வேண்டும்.- ரஞ்சித், ஜவஹர் நகர்.வினியோகம் தாமதம்இடுவம்பாளையம், கிழக்குமேடு நான்கு வீதிக்கு, குடிநீர், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வினியோகிக்கப்படுகிறது. குடிநீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.- குமரன், இடுவம்பாளையம்.குழியை மூடுங்கதிருப்பூர் குமரன் ரோடு, ஜி.ஜி., டவர் எதிர் வீதியில் சாலை சேதமாகி குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.- சக்திசண்முகம், நல்லுார்.சாலை சீரமைக்கலாமே!திருப்பூர், 24வது வார்டு, அறிவொளி வீதியில், பாதாள சாக்கடை, நான்காவது குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்த போது, சாலை தோண்டப்பட்டது. அப்படியே உள்ளது. சீரமைக்க வேண்டும்.- ரவிக்குமார், அறிவொளி வீதி.n திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வளைவில் ரோடு குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- பிரபுகுமார், எஸ்.ஆர்., நகர்.வீணாகும் தண்ணீர்திருப்பூர் வளர்மதி பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஈஸ்வரன் கோவில் பாலம் வரும் வழியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலையும் சேதமாகிறது.- குரு, வளர்மதி ஸ்டாப்.n திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- நட்ராஜ், பங்களா ஸ்டாப்.பஸ் ஸ்டாப்'குடி'மகன்களுக்கா!குன்னத்துார் பஸ் ஸ்டாப்பில் 'குடி'மகன்கள் உறங்குவதால், பஸ்சுக்கு காத்திருப்போர் அமர முடியாமல் போகிறது.- சுரேஷ், குன்னத்துார்.பயன்பாட்டுக்கு வருமா?திருப்பூர், 51வது வார்டு, அரண்மனைப்புதுார் பொது கழிப்பிடம் சுகாதாரமில்லாமல் காணப்படுகிறது. துாய்மைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.- மணிகண்டன், அரண்மனைப்புதுார்.இருந்தும் பயனில்லைதிருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே-அவுட் நான்காவது வீதியில், தெரு விளக்கு வெளிச்சம் சாலையில் தெரியாத அளவுக்கு மரக்கிளைகள் வளர்ந்துள்ளது. மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.- மனோகர், கொங்கு மெயின் ரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை