உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடையில் நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

கோடையில் நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

திருப்பூர்; கோடை வெயில் கொளுத்தும் நேரத்திலும், ஆண்டிபாளையம் குளம் நிரம்பி வழிவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், நொய்யல் ஆற்றுநீர் நிரம்பும் குளம், குட்டைகள் உள்ளன. நொய்யல் தடுப்பணையில் இருந்து வரும் ஆற்று நீரை எடுத்து, குளம், குட்டைகளில் நிரம்பி, ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.சாமளாபுரம் குளத்தை போலவே, ஆண்டிபாளையம் குளமும், ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. நல்லம்மன் தடுப்பணை, ஒட்டணை என, இருவேறு தடுப்பணைகளில் இருந்து, ராஜவாய்க்கால் வழியாக, குளத்துக்கு தண்ணீர் வருகிறது.ஆண்டிபாளையம் குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும், நொய்யலில் லேசான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அதைக் குளத்தில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக, குளத்துக்கு குறைவான அளவு தண்ணீர் வரத்து கிடைத்தது. இதன் காரணமாக, ஆண்டிபாளையம் குளம் நிறைந்து, கடந்த சில நாட்களாக உபரிநீர் வழிந்தோடுகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், குளம் நிரம்பி, உபரிநீர் வெளியே றுவதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை