அங்காளம்மன் கோவில் திருப்பணிகள் தீவிரம்; கும்பாபிேஷக விழா குறித்து ஆலோசனை
திருப்பூர்; முத்தண்ணம்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில், யாகசாலை பூஜை ஏற்பாடுகள் முதலியார் சமுதாய கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முத்தண்ணம்பாளையம் அங்காளம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூலவர் விமானத்துக்கு, தங்ககவசம் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில், பராமரிப்பு பணி நடந்து நிறைவடையும் தருவாயில் உள்ளது.கோவில் கும்பாபிேஷகம் தொடர்பான ஆலோசனை கூட்டம், காமாட்சி யம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கும்பாபிேஷக விழா குறித்து ஆலோசனை வழங்கினார்.ஸ்ரீஅங்காளம்மன் அனைத்து முதலியார் சமுதாய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு, கும்பாபிேஷக பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் செல்வம், செயலாளர் சுப்பிரமணியம், துணை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சத்தியநாராயணன் பேசினர். தமிழகத்தில் உள்ள, முதலியார் சமுதாயத்தில், 42 குலங்களுக்கு, முத்தண்ணம்பாளையம் அங்காளம்மன் குலதெய்வம்.கும்பாபிேஷக பணிகள், ஒவ்வொரு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாகசாலை பூஜைகள் ஏற்பாடு, முதலியார் சமுதாய மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட பகுதிகளில் வசிக்கும் சமுதாய மக்களையும், விழாவில் பங்கேற்க அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.