மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு
03-Aug-2025
அவிநாசி; அவிநாசியில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய இணைச் செயலாளர் சுகன்யா வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, வட்டாரச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் பேசினர். அதில் மையப்பணிகளை செய்வதற்கு 5ஜி மொபைல் போன், 5ஜி சிம் கார்டுகள், அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்குக்கு ஏற்ப வழங்க வேண்டும். மையத்திற்கு, இணையதள 'வைபை' சேவை இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டனர். முன்னதாக, விசைத்தறி தொழிலாளர் சம்மேளன சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய பொருளாளர் மல்லிகா நன்றி கூறினார்.
03-Aug-2025