உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

திருப்பூர் : உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ., கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், லட்சுமிகாந்த் ஆகியோர் தலைமையில், மாணவ, மாணவியர் புகையிலை பயன்பாட்டை எதிர்த்து, முகத்தில் வர்ணம் பூசி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி